Loading...
தமிழக அரசியலில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து நடிகர்கள் கமல், சூர்யா, அரவிந்த் சாமி உள்பட பலர் ஆவேசமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் கடுமையான வார்த்தைகளால் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே இப்போது அனைவரின் மனதிலும் உள்ளது. குழந்தைகளும் சட்டசபையில் என்ன நடக்கிறது என கேட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளட்டும். இந்த நாட்கள் ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது.
Loading...
சசிகலாவுக்கு ஜெயிலில் ஒரு லேப்டாப் கொடுங்கள். இதனால், 4 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கும்பல் போக்குவரத்து செலவு மிச்சமாகும். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது” என்று கூறியுள்ளார்.
Loading...