பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரி பீரோவில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போய் விட்டார். அவர் வீட்டார் பொலிசிடம் புகார் அளித்தும் Victoria பற்றிய விவரங்கள் தெரியாமலே இருந்து வந்தது.
இந்நிலையில் போன மாதம் ஒரு வீட்டில் பயங்கர துர்நாற்றம் வாடை வருவதாகவும் உடனே வருமாறும் பொலிசாருக்கு தகவல் வந்தது.
தகவல் வந்த இடத்துக்கு சென்று பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் அவர்கள் போன வீட்டின் அலமாரி பீரோவில் ஒன்றரை வருடங்கள் முன்னர் காணாமல் போன Victoriaவின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
அந்த வீட்டில் இருந்த Andrew Colin (43) என்பவரின் காதலி தான் Victoria எனவும் அவர் தான் சடலத்தை ஒன்றரை வருடங்களாக பீரோவில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
Andrewவை கைது செய்த பொலிசார் Victoria இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.