மின்வெட்டை இடை நிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு இடைநிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பினருக்கும் அறிவிக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
66 வீதத்தால் மின் கட்டண அதிகரிப்பு
மேலும், மின்சார சபையின் கட்டண உயர்வை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாகவும், ஆணைக்குழு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை எனவும், இதன் காரணமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு இழுபறிக்கு மத்தியில் இன்று முதல் 66 வீதத்தால் மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.