Loading...
யூடியூப் (YouTube) இன் புதிய தலைவராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க நாட்டவரான நீல் மோகன் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைப்பொறுப்பில் இருந்த, தலைமைச் செயல் அதிகாரி சூசன் வோஜ்சிக்கி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னதாக கூகுளில் விளம்பர தயாரிப்புகளுக்கான மூத்த துணைத்தலைவராக இருந்த வோஜ்சிக்கி, 2014 இல் YouTube இன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
கூகுளின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்த அவர், தாய் நிறுவனமான Alphabet Inc உடன் சுமார் 25 வருடங்கள் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையிலேயே, YouTube இன் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன், புதிய தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...