Loading...
அரச அச்சகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
Loading...
போதிய பொலிஸ் பாதுகாப்பு இன்மையால் உள்ளுராட்சி மன்ற வாக்குகள் அச்சிடும் பணிகள் தடைப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரை அரச அச்சகத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் நேற்று இரவு குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...