Loading...
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சந்தித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் ஆளுநரை சந்தித்தார்.
இதனையடுத்து ராஜ்பவன் சென்ற ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்தார்.
Loading...
ஓ.பன்னீர் செல்வத்துடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, அதிமுக எம்.பி.மைத்ரேயனும் ஆளுநரை சந்தித்தனர்.
இதன்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட விவகாரம் குறித்தும் ரகசிய வாக்கெடுப்பு கோரியும் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Loading...