ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார்.
இந்த போட்டியில் தற்போது வரை அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த அந்த அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. முக்கியமாக அஸ்வின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.
இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை அஸ்வின் பிடித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.