Loading...
இலங்கையில் கடல் மற்றும் விமான சேவைகள் துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் நிதியுதவி வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.
துறைமுக நடவடிக்கைகளுக்கு தேவையான ரேடார் கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளும் ஜப்பானில் இருந்து கிடைக்கப்பெறவுள்ளன.
Loading...
துறைமுக செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க இது உதவும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிஷிகோஷி ஹிடேகிக்கும் அமைச்சருக்கும் இடையில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...