எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளின் கீழ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கடிதங்களை வழங்கும் நடவடிக்கையில் பொதுஜனபெரமுனுவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் அரசியல் சர்ச்சை
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த இடத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்படுபவர்களுக்கு பதிலாக வேறு உறுப்பினர்களை நியமிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே எதிர்வரும் வாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.