இலங்கையையும் பாகிஸ்தானையும் பொருளாதார சிக்கலில் இருந்து காப்பாற்றுவததற்காக ஜி-20 நாடுகளுக்கான திட்டத்தை இந்தியா தயாரித்து வருகிறது.
சீனா போன்ற உலகின் மிகப் பெரிய இறையாண்மைக் கடன் வழங்கும் நாடுகள், அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கடனைக் கடுமையாகக் குறைக்கச் சொல்வதே இதன் நோக்கமாகும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
ஜி 20 நாடுகளின் தலைவரான இந்தியா, தொற்றுநோய் மற்றும் யுக்ரைன் போருக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கடனாளி நாடுகளுக்கு உதவ இந்த திட்டத்தை இந்தியா கொண்டு வருவதாக அதிகாரி ஒருவரைக் கோடிட்டு ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
மெய்நிகர் சந்திப்பு
20 நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் அடுத்த வாரம் பெங்களூருவில் சந்திக்கிறார்கள். இந்த ஆண்டு, ஜி-20 நாடுகளின் தலைவர் பதவி இந்தியாவின் கையில் இருப்பதால், இந்த ஆண்டு குழுவின் அனைத்து கூட்டங்களையும் இந்தியாவே நடத்துகிறது.
இதில் இன்று மெய்நிகர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக வங்கி, இந்தியா, சீனா, சவுதி அரேபியா, அமெரிக்கா உட்பட்;ட நாடுகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தன.
இதேவேளை மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை சீனக் கடன் வழங்குநர்களுக்கு 7.4 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனான 100 பில்லியன் டொலர்களில் சுமார் 30 சதவீதம் சீனாவிடமே பெற்றுள்ளது