சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய நமது துன்பம் அகலும்.
நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.
சிவனை ‘அபிஷேகப்பிரியன்’ என்றும் சொல்வார்கள். அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம். சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன். அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும்.
அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.