மின் கட்டண உயர்வுடன் ஒப்பிடும் போது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மின் கட்டணம் 60சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 2022 இல், மின் கட்டணம் 76சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் 6 மாதத்தில் 142 சதவீதம் மின் கட்டணம் அதிகரித்துள்ளது.
உணவுத் துறையில், சோறு பாக்கெட்டுகள், சிற்றுண்டிகள், தேனீர் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனுடன், ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் விலையை 20 சதவீதம்உயர்த்துவதாக அறிவித்துள்ளனர்.
நகல் பிரதிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சேவை வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தாம் வழங்கும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை நிர்மாண சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான உணவுப் பொதிகளின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் விலை எவ்வளவு சதவீதம் உயர்த்தப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும், அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளதால், உள்ளூர் அரிசி விலையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நுகர்வோர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.