2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் பசுமை நிதிக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
காலநிலை மாற்றத்தில் ஏற்படும் சவால்
ருவான் விஜேவர்தன தலைமையில் நேற்று (17.02.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
காலநிலை மாற்றத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி நகரவும் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கு பசுமை நிதிக் குழு பணியாற்றவுள்ளது.
பசுமை நிதியத்தின் திட்ட வரைபடம், Green Finance, Green Bonds, Climate Finance போன்ற தற்போதைய செயல்முறைகள் அடங்கிய ஒரு தெளிவான நோக்கம், செயல்பாடு மற்றும் இலக்குகளுடன் ஒரே தளத்தில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விசேட கவனம்
இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சாந்தனி விஜேவர்தன, மேலதிக செயலாளர் வெர்னன் பெரேரா உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.