சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வருகிறார் சசிகலா.
சென்னை சிறைக்கு மாற முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த மாறுதல் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருகிறது. இதற்குப் பின்னால், தமிழக சிறையில் இருந்தால்தான் தமிழக அரசியலை கட்டுப்படுத்த முடியும்.
அது மட்டுமின்றி அத்தனை வசதிகளையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளமுடியும். சிறையை ஹோட்டல் போல மாற்றக் கூட அனுமதி கிடைக்கும். நன்னடத்தையை காரணம் காட்டி வெளியே வரவும் வாய்ப்புகள் உண்டு
அதே போல அரசியல் நிகழ்வுகளை கர்நாடக சிறையில் இருந்து கொண்டு கட்டுப்படுத்துவது கடினமான செயல்.
கர்நாடக நீதிமன்றத்தில் தனக்கு சலுகைகளுக்காக போராட வேண்டியிருக்கும் என்பது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.