விவோ நிறுவனத்தின் புதிய V27 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய V27 சீரிசில் விவோ V27 மற்றும் V27 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுகின்றன.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் விவோ V27 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. ப்ளிப்கார்ட் சார்பில் வெளியிடப்பட்ட கூகுள் ஆட்ஸ்-இல் விவோ V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி தவறுதலாக அம்பலமாகி விட்டது. அதன்படி புதிய விவோ V27 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வைத்து சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
விவோ V27 சீரிஸ் மாடல்கள் மார்ச் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ப்ளிப்கார்ட் வழங்கும் கூகுள் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள், விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. மேலும் புதிய விவோ V27 சீரிஸ் மாடல் விவரங்கள் பென்ச்மார்க்கிங் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.
விவோ V27 மற்றும் V27 ப்ரோ அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி V27 ப்ரோ மாடலில் வளைந்த டிஸ்ப்ளே டிசைன், பன்ச் ஹோல் ஸ்கிரீன், பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் சோனி IMX 766V கேமரா சென்சார் மற்றும் OIS வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் 120Hz 3D டிஸ்ப்ளே, 60-டிகிரி ஸ்கிரீன் கர்வேச்சர், நிறம் மாறும் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கும்.
முன்னதாக விவோ V27 ப்ரோ இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 41 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. எனினும், இதன் உண்மையான விற்பனை விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். இத்துடன் அறிமுக சலுகைகள் மற்றும் கார்டு தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.