நாட்டிலுள்ள சுமார் 18 சதவீத உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உணவகங்களின் 2022 பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்தியற்ற நிலை
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“ சுமார் 18 சதவீத உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. இந்த உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
குறிப்பாக மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
சட்ட நடவடிக்கை
மேலும் 27 சதவீதம் சராசரி நிலையிலும் மற்றும் 55 சதவீதம் மிகவும் சிறந்த நிலையிலும் உள்ளன.
தரவுகளின்படி, A பிரிவு உணவகங்களில் 55 சதவீதமும், B பிரிவு உணவகங்களில் 27 சதவீதமும், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான உணவகங்களும் உள்ளன.
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் B வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்ற சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.”என கூறியுள்ளார்.