தமிழ் சினிமாவில் பல காதல் திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக இருப்பவர் தான் மாதவன்.
இவரின் கார், வீடு என எல்லாம் சேர்த்தால் இவ்வளவு சொத்து மதிப்பைக் கேட்டு ஆடிப்போய் இருக்கிறார்கள்.
நடிகர் மாதவன்
மாதவன், இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என அத்தனை துறைகளிலும் ஒரு கலக்கலான அனுபங்களைக் கொடுத்தவர்.
நடிகர் மாதவன் முதலில் இந்தி சினிமாவில் தான் அறிமுகமாகி இருந்தார். சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பாக இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
இவர் நடித்த ‘பனேகி அப்னி பாத்’ எனும் தொடரில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
அதற்குப்பிறகு தான் மணிரத்னம் இயக்கத்தில் ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடிக்க தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து தான் கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா போன்ற திரைப்படங்கள் மூலம் சாக்லேட் பாய்யாக கவர்ந்திழுக்கப்பட்டார்.
மேலும், தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
நடிகர் மாதவனின் சொத்து விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில், நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இவர் திரைப்படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரின் பிரமாண்டமான வீடு ரூ.18 கோடியாம். அவரிடம் இரு கார்கள் இருக்கின்றதாம் அதில் Rover Sports கோடி ரூபாவிலும், Mercedes Benz GL350 இந்தக் காரின் விலை வெளியிடப்படவில்லை.