இந்த காரணத்திற்காகத் தான் ராஜா ராணி சீரியலில் நடிக்க வந்தேன் என புதிய சந்தியாவாக நடிக்க வந்த ஆஷா கௌடா தெரிவித்திருக்கிறார்.
ராஜா ராணி 2
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்னதாக இந்த சீரியலில் கதாநாயகியாக ஆல்யா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இடையில் இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.
அப்போது ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் தான் புதிய சந்தியாவாக களமிறங்கி பழைய சந்தியாவை மறந்து புதிய சந்தியாவை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீரியலில் இருந்து தானும் விலகுவதாக தனது சமூக வலைத்தளமொன்றில் தெரிவித்திருக்கிறார்.
இதனால் சந்தியா கதாப்பாத்திரத்திற்கு “கோகுலத்தில் சீதை” என்ற சீரியலில் நடித்த ஆஷா கௌடா தான் அவருக்கு பதிலாக நடிக்க இருக்கிறார்.
புது சந்தியா
இந்த சீரியலில் சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் பொலிஸ் தோற்றத்தில் ஒரு மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார் பழைய சந்தியா.
இந்த இடத்தை ஆஷா கௌடா நிரப்பிவிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் ராஜா ராணி சீரியலில் நடிக்க வந்ததற்கு இதுதான் காரணம் என தெரிவித்திருக்கிறார்.
என்னவெனில், ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சீரியல் அது மட்டுமல்லாமல் எனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரமும் போல்ட்டாக இருக்கிறது மேலும் எனக்கும் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இந்த சீரியலில் நடிக்க வந்தேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
இவர் தனது நடிப்பால் ரியா விஸ்வநாதன் விட்ட இடத்தை நிரம்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.