உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி இன்று கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்த உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்தால் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்த பணமில்லை எனக்கூறும் அரசாங்கம், சுதந்திர தின நிகழ்வுகளை பல இடங்களில் நடாத்தி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் வாக்குரிமையை அபகரிக்கும் இந்த யானை மொட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.