Loading...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று(20.02.2023) திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடன் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
பயண விபரம்
போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் கடைசி வரை அவரது பயண விபரம் இரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, உக்ரைன் – ரஷ்ய போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பல உதவிகளையும் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...