தமிழகத்தின் கரூர் மாவட்டத்தின் அருகே கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூர் கிராமத்தில் நேற்று கபடிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் கபடி ஆடிய கணக்கப்பிள்ளையூரை சேர்ந்த 28 வயது மாணிக்கம் என்ற இளைஞர் ரைட் செல்லும் போது திடீரென கீழே விழுந்துள்ளார்.
மாரடைப்பு தான் காரணம்
கீழே விழுந்த அவரை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணிக்கத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இழப்புக்கு மாரடைப்பு தான் காரணமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கத்தை இழந்த அவரது குடும்பமும், மாணிக்கத்தின் நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.