விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக இணையத்தில் பேசிவருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ'(Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவர் காஷ்மீர் சென்றுள்ளதால் லியோ படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருந்தும் படக்குழு தரப்பிலிருந்து இந்த தகவலை உறுதிப் படுத்தவில்லை.