இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.
இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத்துறையில் நடிகை ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த ‘மாம்’ திரைப்படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவரது மகள் ஜான்வி கபூர், தற்போது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தல்பப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.