- இந்தி மற்றும் கன்னடத்தில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம்.
- இவர் செல்பி எடுக்க மறுத்ததால் எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் இவரை தாக்கினர்.
இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவரது இசை நிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பட்டர்பேகரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினர்.
அப்போது நேரலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்ததால் சோனு நிகாம் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் பாதுகாவலர்களையும் பாடகர் சோனு நிகாமையும் கடுமையாக தாக்கினர். இதில் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சோனு நிகாம் நன்றாக இருக்கிறார், அவரது குரு, குலாம் முஸ்தபா கான், அவரது நெருங்கிய உதவியாளர், ரப்பானி கான் மற்றும் அவரது பாதுகாவலர் அனைவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.