போக்கோ நிறுவனத்தின் புதிய C55 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ C55 மாடலில் 6.71 இன்ச் HD+ ஸ்கிரீன், 5MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ C55 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், லெதர் போன்ற பேக் ஃபினிஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.
போக்கோ C55 அம்சங்கள்:
6.71 இன்ச் 1650×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, பாண்டா கிளாஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
5MP செல்ஃபி கேமரா
பின்புறம் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை, விற்பனை மற்றும் சலுகை விவரங்கள்:
போக்கோ C55 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன், பவர் பிளாக் மற்றும் கூல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 28 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
விற்பனை துவங்கும் முதல் நாளில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடலுக்கு ரூ. 500 தள்ளுபடி
ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சம் ரூ. 1000 தள்ளுபடி