Loading...
அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பேச அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளது.
தமது சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியுடன் இன்று இந்த கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்த போராட்டம் குறித்து இன்று பல தொழிற்சங்கங்கள் கூடி கலந்துரையாடவுள்ளன.
வரிக் கொள்கை காரணமாக மேலதிக நேர கொடுப்பனவுகள் கிடைகாத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...