- ஒரு அணி பாலோ-ஆன் ஆன பிறகு வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும்.
- கேன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து பாலோ ஆன் தவிர்க்க மீண்டும் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 483 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பநது வீச்சாளர் ஜாக் லீச் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்த ஒரு ரன் வெற்றியின் மூலம் நியூசிலாந்து வரலாற்று சாதனையில் இடம் பிடித்தது. 1 ரன்னில் வெற்றி பெற்ற 2-வது அணி என்ற சாதனையை நியூசிலாந்து அணி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993-ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன்னில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
ஒரு அணி பாலோ-ஆன் ஆன பிறகு வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும்.