Loading...
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகளுடன் பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
Loading...
நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர் மக்களாலும் முச்சக்கர வண்டி சாரதிகளாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் ஏற்பட்ட அசௌகரியங்களை கருதிக்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Loading...