Loading...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
Loading...
புதிய உறுப்பினர்கள்
இதேவேளை, ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகிந்த தேசப்பிரிய முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...