- காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
- இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் – கால் கிலோ
வெங்காயம் – 1
காளான் – 1 கப்
கேரட் – 3
பீன்ஸ் – 3
கோஸ் – சிறிய துண்டு
தனி மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும்.
பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும்.
இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.
இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.