ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களில் ஐஒஎஸ் 16-ஐ வெளியிட்டு வருகிறது.
ஐபோன் பயனர்கள் மத்தியில் Live Wallpaper அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
ஐஒஎஸ் 16 லாக் ஸ்கிரீனில் அனிமேட் செய்யப்பட்ட லைவ் வால்பேப்பர்களை (Live Wallpaper) வைத்துக் கொள்ளும் வசதி நீக்கப்பட்டு விட்டது அனைவரும் அறிந்ததே. ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. எனினும், ஐஒஎஸ் 16-இல் இது நீக்கப்பட்டு விட்டது. திடீரென எதற்காக லைவ் வால்பேப்பர் அம்சம் நீக்கப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த கேள்விக்கு யூடியூபர் கிரெக் யாட் பதில் அளித்து இருக்கிறார். அதில் லாக் ஸ்கிரீனில் வால்பேப்பரை கொண்டு செல்வதற்கான ஜெஸ்ட்யூர் சார்ந்தது என அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுபற்றி தகவல்களை அவர் வழங்கி இருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐஒஎஸ் 11-இல் முதல் முறையாக லைவ் வால்பேப்பர் அம்சத்தை கொண்டு வந்தது. தற்போது ஐஒஎஸ் 16-இல் அதனை நீக்கி இருக்கிறது. இதில் லைவ் வால்பேப்பர் உடன் டைனமிக் வால்பேப்பர்களும் இடம்பெற்று இருந்தது.
பயனர்கள் டிஸ்ப்ளேவை அழுத்திப் பிடித்து லைவ் வால்பேப்பரை பார்க்க வேண்டிய நிலை இருந்து வந்தது. எனினும், ஆப்பிள் கஸ்டமைஸ் செய்யக்கூடிய லாக் ஸ்கிரீனை வழங்க முடிவு செய்த போது இது பிரச்சினையாக உருவானது. ஏற்கனவே இதே போன்ற அம்சம் ஆப்பிள் வாட்ச்-இல் வழங்கப்பட்டு இருந்தது. இதிலும் அழுத்திப் பிடித்தால் தான் லைவ் வால்பேப்பர் ஆக்டிவேட் ஆகும்.
ஐபோனில் கஸ்டம் லாக் ஸ்கிரீனை ஆக்டிவேட் செய்யவோ அல்லது முழுமையாக நீக்கவோ ஆப்பிள் புதிய ஜெஸ்ட்யூர் ஒன்றை சேர்க்க வேண்டும். இதன் மூலம் அழுத்தி பிடிக்கும் போது லாக் ஸ்கிரீன் இண்டர்ஃபேஸ் செயல்படுத்தப்படும். பல்வேறு அம்சங்களிடையே ஆப்பிள் நிறுவனம் சீராக இயங்குவதற்கு மதிப்பு கொடுக்கும். அந்த வகையில், லைவ் வால்பேப்பர் அம்சத்தை அழிக்கும் முன் இந்த அனுபவத்தை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வழங்கியது.
ஆப்பிள் மேற்கொண்ட ஆய்வில், பலர் லைவ் அல்லது டைனமிக் வால்பேப்பர் அம்சங்களை கடந்த சில ஆண்டுகளாகவே பயனர்கள் பயன்படுத்தவில்லை என யூடியூபர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக இந்த அம்சம் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.