சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தனது படத்திற்கு ரஜினியின் படத்தலைப்பபை கைப்பற்றியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பிறகு, பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே நேரத்தில் `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, `இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சிவகார்த்திகேயன்-இயக்குநர் சுதா இடையே நடத்தப்பட்ட பேச்சுவாரத்தையில் இருவரும் இணைய உள்ளது உறுதியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.