சர்வதேச மாடலான இவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இவர் சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருக்கிறார்.
இதில் சபிஜே அளித்த பேட்டி வருமாறு,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று போனாலும் எனக்கு தமிழ் உணர்வு உண்டு. தமிழ் மக்கள் எல்லாரும என் உடன் பிறந்தவர்களாகவே உணர்கிறேன் அதனால் தமிழ்நாடு, மக்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.
அங்கே பிரபல மாடலாக இருந்தாலும் தமிழில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன் இங்குள்ள எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன். குறிப்பாக விஜய் பிடிக்கும். அதேபோல சினிமாவில் போராடி ஜெயித்த விஜய்சேதுபதியும் பிடிக்கும் என்று கூறினார்.
ஒரு நாள் விஜய்யை ‘பைரவா’ படப்பிடிப்பில் சந்தித்தேன். அவ்வளவு எளிமையாக இருந்தார். ஆச்சரியப் பட்டேன். அதுவரை அவரது சாதாரண ரசிகையாக இருந்த நான், அவரைச் சந்தித்த பின்னால் பரம ரசிகையாக மாறிவிட்டேன்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்தான் இந்தியா வந்தேன். இங்கு வந்து எல்லாருடனும் பேசியபின் என் பேச்சுத்தமிழ் மேலும் வளர்ந்து இருப்பதை உணர்கிறேன்.
‘றெக்க’ படப்பிடிப்புக்கு ஒரு நாள் போனேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொண்டேன். அதைப் பார்த்த அந்தப் படத்தின் கேமராமேன் தினேஷ், தான் பணியாற்றும் அடுத்த படத்துக்கு என்னைப் பரிந்துரை செய்து இருக்கிறார் அப்படி வந்த வாய்ப்புதான் நான் நடிக்கும் புதிய படம். இயக்குநர் எம்.ஏ.பாலாவின் ‘காதல் நகரம்’ படம். மோசஸ் இயக்கத்தில் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்கிற தமிழ் டெலிபிலிமிலும் நடித்துள்ளேன்.
படப்பிடிப்பு பார்க்க வந்தேன் இப்படி ஒரு பட வாய்ப்பே கிடைத்துவிட்டது. அதில் எனக்குப் பெயர் சொல்லும் படியான அறிமுகம் கிடைக்கும் என நம்புகிறேன். ‘ஏனிந்த மயக்கம்’ இயக்கிய இயக்குநர் சக்தி வசந்த் பிரபு என் நண்பர்தான். அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.