சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மிக்ஸ் ஃபோல்டூ சீரிஸ் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சியோமி 13 அல்ட்ரா அந்நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தையிலும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2023 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சியோமி நிறுவனம் தனது சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் மிக்ஸ் ஃபோல்டு 3 ஸ்மார்ட்போன் வெளியீடு அதன் முந்தைய வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட மாதத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே பிப்ரவரி மாத வாக்கில் வெளியான தகவல்களின் படி சியோமியின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் யுஎஸ்பி 3.2 போர்ட் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5X ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி UFS 4.0 மெமரி வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் உண்மையில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் பட்சத்தில் இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும்.
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மிக்ஸ் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 8.02 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1914×2160 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 6.56 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1080×2520 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், அதிகபட்சம் 1 டிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மிக்ஸ் ஃபோல்டு 2 மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.