இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகை இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த ‘பேச்சுலர்’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதையடுத்து, ‘கள்வன்’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான ‘அடி கட்டழகு கருவாச்சி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.