சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர பக்தனான ராகவா லாரன்ஸ், தனது அம்மாவின் கோவில் திறப்பு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள லாரன்ஸ்,
“எனது அம்மாவுக்கு கட்டிய கோவிலை விரைவில் திறக்க உள்ளதாகவும், அதற்கு நண்பர்கள், ரசிகர்கள் அனைவரது வாழ்த்துக்களும் தேவை என்றும் கூறிய லாரன்ஸ், அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு தலைவர் ரஜினியை நேரில் சந்தித்து அழைத்ததாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்”.
தற்போயை சூழலில் ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது ரசிகனும் தன்னிடம் நெருக்கமானவருமான லாரன்சின் அம்மா கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லாரன்சின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.