Loading...
கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர் இருமல் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்திய சுகாதாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குழுவைச் சேர்ந்த H3N2 உப பிறழ்வு வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Loading...