Loading...
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஸ் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தின் படி, எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதி மாற்றியமைக்கப்படுகிறது.
Loading...
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு விலையை மீளாய்வு செய்யப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இம்மாதம் அதே விலையில் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...