பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான்.
இவர் புகைப்படக்காரர்களை கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சையிப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினார்கள்.
அப்போது வீட்டின் எதிரே சில புகைப்படக்காரர்கள் காத்து நின்றனர். சையிப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். இதனால் கோபமான சையிப் அலிகான் ஒன்று செய்கிறீர்களா. அப்படியே எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.
உடனே புகைப்படக்காரர்கள் பின்வாங்கினர். பின்னர் புகைப்படக்காரர்கள் பார்த்து கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றார். சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது.