- நரசிம்மருடைய மந்திரங்களை சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும்.
- இன்று நடராஜர் அபிஷேக தினம்.
இன்று நரசிம்ம சதுர்த்தசி தினமாகும். புதன் பெருமாளை குறிப்பார். புதனுடைய ஆயில்யம் நட்சத்திரமும், சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த சிறப்பாக இன்றைய தினம் வருகிறது.
இன்று விரதம் இருந்து நடராஜர், நரசிம்மரை வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று சிவன் கோவிலில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு நடராஜரை வழிபாடு செய்யலாம். மாலையில் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
இன்று மாலை சூரியன் மறையும் நேரமும் இரவுத் தொடக்கமும் கலந்த வேளையில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். விரதம் இருந்து நரசிம்மருடைய படத்திற்கு துளசி மாலை அணிவித்து பானகம் நைவேத்தியமாக படைத்தல் முக்கியமானது. மாலையில் பூஜை செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.
அப்போது நரசிம்மருடைய மந்திரங்களை சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். இன்று நடராஜர் அபிஷேக தினம். வருடத்தில் 6 அபிஷேகங்கள் நடராஜருக்கு உண்டு.
அதில் கடைசி அபிஷேகம் இன்று (மாசி மாதம் சுக்ல சதுர்த்தசி) நடைபெறுவதால் நடராஜமூர்த்தியைத் விரதம் இருந்து தரிசிப்பதும், “நடராஜ பத்து” முதலிய மந்திரங்களை பாராயணம் செய்வதும் அற்புதமான பலன்களை தரும்.