அன்றாடம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் சில விடயங்கள் உயிர் பாதிப்பில்கூட கொண்டு நிறுத்திவிடும் என்பதை மறந்து ஒருசிலர் நடந்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் விமானமொன்றில் நடந்துள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து போஸ்டன் நோக்கி பறந்து சென்று கொண்டிருந்தது.
குறித்த விமானம் தரையிறங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் முதல் வகுப்பிலுள்ள அவசரகால கதவு திறந்திருப்பதாக விமான ஊழியருக்கு தகவல் வரவே, அதை பரிசோதிப்பதற்காக ஊழியர் சென்றுள்ளார்.
அப்போது சுமார் 33 வயது மதிக்கத்தக்க நபரொருவர் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றுள்ளார். அதை தடுக்க வந்த ஊழியர்களை பயங்கர ஆயுதம் கொண்டு கழுத்தில் தாக்க முயன்றுள்ளார்.
பின்னர் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அவரை மடக்கி பிடிப்பதற்கு உதவி செய்துள்ளனர். குறித்த நபரை விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி விமான ஊழியரை தாக்க முயன்ற குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை மாத்திரமின்றி 2.5 லட்சம் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
குறித்த நபர் மசாசூசெட்சின் லியோமின்ஸ்டர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ சிவிரோ டாரஸ் என தெரிய வந்துள்ளது.