இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’.
இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் பல சவால்களைச் சந்தித்திருப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். அகிலன் நிறையக் கஷ்டப்பட்ட படம், இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது, தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது. பாபி மாஸ்டரை பேராண்மையில் இருந்து தெரியும். இயக்குனருடன் இணைந்து பயணித்துள்ளார்.
பிரியா தமிழ் பேசி நடிக்கும் கதாநாயகி, ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார், தயாரிப்பாளர் சுந்தர் சார் சகோதரர் மாதிரி தான், நிறையப் படங்கள் சேர்ந்து பயணிக்கப் போகிறோம் சார். இயக்குனர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்குப் பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். இந்தப்படம் நல்லா வந்ததற்குக் காரணம் அவருடைய டீம் தான்” என்று கூறியுள்ளார்.