காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மைக்கேல் மும்பை வந்தார். அவருடன் சுருதிஹாசன் படங்கள் எடுத்துக் கொண்டார். என்று தகவல்கள் வெளியாகின. இத்தாலி நாட்டவரான மைக்கேல், லண்டனில் பிறந்து வளர்ந்தவர். லண்டனை சேர்ந்த டீப்டைவிங் மென் நாடக குழு நடிகர். ஒருமுறை சுருதிஹாசன், லண்டனுக்கு ராக் இசை குழுவுடன் பாட சென்றார். அப்போது அவருக்கு மைக்கேல் அறிமுகமானார்.
சுருதிஹாசன் விரைவில் லண்டனில் தனது இசை குழு மூலம் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அது குறித்து பேசுவதற்காக மைக்கேல் கார்செல் மும்பை வந்தார். அவரை சுருதிஹாசன் விமான நிலையம் சென்று வரவேற்றார். இருவரும் நடந்து வந்த, சேர்ந்து நின்ற படங்கள் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
மும்பை வந்த அவரிடம் விரைவில் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பேசியுள்ளார். சில தினங்கள் அவர் மும்பையில் தங்கிவிட்டு சென்றதால், இருவருக்கும் காதல் என்ற செய்தி பூதாகரமாகிவிட்டது.
இது குறித்து சுருதிஹாசன் அளித்த பேட்டியில் ‘‘மைக்கேலும் நானும் நல்ல நண்பர்கள். அவ்வளவு தான். நட்பை தாண்டி எங்களுக்குள் எதுவும் இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை’’ என்று கூறி உள்ளார்.