உலம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் மகளிர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும். உலக மகளிர் திருநாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.