- பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் அனுசரிக்கும் விதமாக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
- மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் திரைப்பிரபலங்களும் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள்.
ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் திரைப்பிரபலங்களும் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.