- ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
- பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்துள்ளார்.
பெண்கள் பிரீமியர் லீக் 2023 சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரும் ஆர்சிபி அணி வீரருமான பெர்ரியிடம், உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரில் யாரை தேர்வு செய்யவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
கோலிக்கும் டோனிக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடினமான பணிகளில் ஒன்றாக இருக்கும். இதற்கு அவர் தந்திரமான ஒரு பதிலை அளித்துள்ளார்.
இருவரையும் தேர்வு செய்து, அவர்கள் விளையாடுவதை வெளியில் இருந்து பார்ப்பேன் என கூறினார்.
கேள்வி: தொடக்க ஆட்டக்காரராக கோலி அல்லது டோனி யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
பெர்ரி: நான் இருவரையும் தேர்ந்தேடுத்துகிறேன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று குஜராத் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.
பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.