விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம்- கௌதம் மேனன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை கௌதம மேனின் ஒன்ராகா என்டர்டெயிண்ட்மண்ட், கொண்டாடுவோம் என்டர்டெயிண்ட்மண்ட், மோஷன் பிக்சர்ஸ் மதன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கௌதம் மேனன்-விக்ரம் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிற நிலையில், தற்போது அந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது.
இதுகுறித்து நடிகர் விக்ரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
‘கௌதம் மேனனுக்கும், தனக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், தான் தற்போது வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறேன்.
எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் திகதிக்கு பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வேன். வதந்திகள் குறித்து ரசிகர்கள் கவலைபடத் தேவையில்லை’ என்றும் குறிப்பட்டுள்ளார்.