Loading...
நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
Loading...
அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல சேவைகள் ஸ்தம்பிப்பதால் நாடு முடங்கும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...