பொதுவாகவே பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் என்பது மிகவும் விருப்பமானதொன்று தான். ஆனால் அந்தக்காலத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் தரையை தட்டும் அளவிற்கு முடி வளர்ந்திருக்கும்.
அவர்கள் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கும் நீண்ட முடி வளர்ச்சிக்கும் சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.
தீர்வு
உங்கள் தலைமுடியின் அளவிற்கு தகுந்தவாறு வெந்தயத்தை முதல்நாள் இரவே ஊறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதை மறுநாள் காலையில் எடுத்து ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின், சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதன் தோலை சீவி நன்றாக கழுவி கொள்ளுங்கள். இந்த இஞ்சியை சீவி அதில் உள்ள சாறை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது பேஸ்டாக அரைத்து வைத்த வெந்தயத்துடன், இஞ்சி சாறை சேர்த்து கையால் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு முதல்நாள் இரவு தலையில் எண்ணெய் வைத்து தேய்த்து சிக்கில்லாமல் சீவிக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக பிரித்து முடியின் வேர்க்கால்களில் படும் படி வெந்தய ஹேர் பேக்கை தேய்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தலை அலசும் போது முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றி நன்றாக அலசி கொள்ளுங்கள். பிறகு ஷாம்பு போட்டு அலசி கொள்ளுங்கள்.
இந்த ஹெயார் பெக்கை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைந்து விரைவில் முடி நீளமாகவும் கருமையான முடியையும் பெறலாம்.