வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியதாவது, “இப்படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கும் ஒன்றாக இருக்கும். வென்றிமாறனின் ஒவ்வொரு கதைக்களமும் தனித்துவமானவை. கடலில் தோன்றும் அலைகளைப் போல. 1500 திரைப்படத்திற்கு இசையமைத்து விட்டேன். இப்போதும் சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு கிடைத்த முக்கியமான இயக்குனர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திரையுலகிற்கு கிடைத்த நல்லதோர் இயக்குனர் அவர். அதேபோல இப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையைக் கேட்பீர்கள்” என்று கூறினார்.